16 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த சூர்யா - ஜோதிகா! கதையோடு காத்திருந்த பாலா?
தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் அவர் நடித்த படங்கள் மக்கள் மனதில் தீராத இடத்தினை பெற்று வருகிறது. சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்களை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் மார்ச் 10ல் வெளியாகவுள்ளத.
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன் பிதாமகன், நந்தா படங்களை இயக்கிய பாலாவுடன் இதுவரை சேராமல் இருந்துள்ளார். இந்நிலையில் நடிக்கத்தான் முடியவில்லை பாலாவை வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா.
அதற்கான அறிவுப்பும் வெளியானது. இந்நிலையில் படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சூர்யாவின் காட்சிகள் முதலில் படமாக்க திட்டமிட்டுள்ளார் பாலா.
அதன்பின் நடிகை ஜோதிகாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும், விக்ரம் நடித்த ஸ்கெட்ச் திரைப்படத்தின் செட்டுகளை அலங்கரித்த கலை இயக்குனர் மாய பாண்டி தான் இந்த படத்திற்கும் செட் வேலைகளை கவனித்துக் கொள்கிறார்.