சூர்யா - ஜோதிகாவின் மகளா இது!! அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் தியா.. வீடியோ..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார் நடிகர் சூர்யா.
கடந்த 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சூர்யா, தியா மற்றும் தேவ் குழந்தைகளை பெற்றார். திருமணத்திற்கு பின் ஜோதிகா சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வந்தார்.
தற்போது ஜோதிகா மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் பாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதற்காக மும்பையில் பல கோடி மதிப்பில் பங்களா வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சூர்யா, குழந்தைகள் மற்றும் மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் இருக்கும் பங்களாவில் இருந்து வெளியில் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. 16 வயதாகியிருக்கும் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியாவும் இருந்துள்ளார்.
பெரிய பெண்ணாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய தியாவை பார்த்து பலர் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். தற்போது சூர்யா கேரளாவில் கொச்சியில் இருக்கும் மறைந்த இயக்குனர் சித்திக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Suriya and #Jyotika Snapped Post Dinner at Bandra ❤️#Kanguva pic.twitter.com/lFqqp0e6iG
— Cinewoods (@Cinewoodsoffl) August 11, 2023
