மும்பையில் குடித்தனம்!! மாத்தி மாத்தி காரணம் சொல்லும் சூர்யா - ஜோதிகா..கலாய்க்கும் ஃபேன்ஸ்
சூர்யா - ஜோதிகா
சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன் பின் இவர் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மும்பையில் குடித்தனம்
சூர்யா - ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் புது வீடு எடுத்து செட்டிலாகிவிட்டார் என்ற தகவல் வெளியானது. அதற்கு என்ன காரணம் என்று ஜோதிகா, அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக குடிப்பெயர்ந்தோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா அளித்த பேட்டியொன்றில், எங்கள் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் நாங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு குடிப்பெயர்ந்தோம். சென்னையைவிட மும்பையில் அதிகப்படியான சர்வதேச பள்ளிகள் இருப்பதால் தான் மும்பைக்கு குடிப்பெயர்ந்தோம் என்று கூறியிருக்கிறார் சூர்யா.
அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக, இருவரில் யார் பேசுவது உண்மை என ட்ரோல் செய்து வருகிறார்கள்.