சூர்யா ஜோதிகாவை சேர்த்து வெச்சது இந்த அயோக்கிய பொண்ணு தான்!! சிவக்குமார் இப்படி சொல்லிட்டாரே?

Sivakumar Suriya Jyothika Radhika Sarathkumar Suhasini
By Edward Feb 12, 2026 06:45 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக திகழ்ந்து வருபவர்கள் தான் சூர்யா - ஜோதிகா ஜோடி. தங்களின் கரியரின் ஆரம்பத்திலேயே காதலிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்களின் காதலுக்கு சூர்யாவின் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.

இருந்தாலும் திருமணம் செய்தால் ஜோதிகாவுடன் தான் என்ற குறிக்கோளுடன் அப்பாவின் சம்மதத்துடன் பல ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா.

சூர்யா ஜோதிகாவை சேர்த்து வெச்சது இந்த அயோக்கிய பொண்ணு தான்!! சிவக்குமார் இப்படி சொல்லிட்டாரே? | Suriya Jyothika S Love Radhika Reveals In Viral

ராதிகா

சமீபத்தில் நடிகை சுஹாசினி எடுத்த பேட்டியொன்றில் நடிகர் சிவக்குமார், நடிகை ராதிகா கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகை ராதிகா, உயிரிலே கலந்தது படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா ரொம்பவே அமைதியாக இருப்பார்.

நான் அவரிடம், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, நன்றாக சிரி, பேசு என்று சூர்யாவிடம் சொல்வேன். ஜோதிகாவோ ஒரு மூலையில் அமர்ந்திருப்பார். நான் சூர்யாவிடம், போய் சூர்யா ஜோதிகாவிடம் பேசு என்று சொல்வேன் என்று ராதிகா கூறினார்.

சூர்யா ஜோதிகாவை சேர்த்து வெச்சது இந்த அயோக்கிய பொண்ணு தான்!! சிவக்குமார் இப்படி சொல்லிட்டாரே? | Suriya Jyothika S Love Radhika Reveals In Viral

அயோக்கிய பொண்ணு

இதை கேட்ட சிவக்குமாரோ, பார்த்தீங்களா ஜோதிகாவையும் சூர்யாவையும் சேர்ந்ததற்கு இந்த அயோக்கிய பொண்ணுதான் காரணம். இப்போ அவங்க இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்றுவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

சூர்யா ஜோதிகாவை சேர்த்து வெச்சது இந்த அயோக்கிய பொண்ணு தான்!! சிவக்குமார் இப்படி சொல்லிட்டாரே? | Suriya Jyothika S Love Radhika Reveals In Viral

மேலும் ராதிகா பேசுகையில், நானும் சிவக்குமாரும் சேர்ந்து சீரியல் நடித்தோம், அப்போது ஷூட்டின் கேப்பில் அவரிடம், அண்ணா விடுங்க அண்ணா லவ் பண்றாங்க, கல்யாணம் பண்ணிக்கட்டுமே என்று சொல்வேன்.

அவரோ அதெல்லாம் ஒத்து வராது என்று சொல்வார், இடை இடையே சூர்யா வேறு, எனக்கு ஃபோன் செய்து, அப்பா என்ன சொல்றாரு அக்கா என்று கேட்டுக்கொண்டே இருப்பார் என்று ராதிகா இந்த விஷயத்தை சுவாரஸ்யமாக கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.