வெளிநாட்டில் சூர்யாவின் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
Suriya
Box office
Karuppu
By Karthick Raja
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் கருப்பு. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இப்படம் உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்த வசூல் மற்றும் லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வெளிநாட்டில் இப்படம் ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளது. இதில் ரூ. 20 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.