ஆர்.ஜே.பாலாஜி பிடிவாதம்.. சூர்யாவின் கருப்பு படத்திற்கு வந்த சிக்கல்!
சூர்யா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே ஆர்ஜே.பாலாஜிக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்த வண்ணம் உள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதன் பின் இருக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.
சிக்கல்!
இந்நிலையில், தற்போது அதிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்தபோது ஆர்.ஜே.பாலாஜிக்கு அது நிறைவாக இல்லையாம்.
இதனால் சுமார் பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை திரும்ப படப்பிடிப்பு நடத்தவேண்டும் அதாவது ரீஷூட் செய்யவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ந்துபோன தயாரிப்புத் தரப்பு இதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஆனால் ஆர்.ஜே.பாலாஜி திருப்தியடையாமல் மீண்டும் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிறாராம். இதனால் படத்தின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.