சூர்யாவின் 51வது பிறந்தநாள்!! அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Suriya Birthday Karuppu
By Jai Jul 23, 2026 10:45 AM GMT
Report

சூர்யா 51

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கருப்பு படம் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் படமானது. சூர்யாரின் சினிமா பயணத்தில் கருப்பு படம் தான் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இன்று ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 51வது பிறந்தநாளை சூர்யா கொண்டாடுகிறார். நீட் தேர்வு முறைக்கேடு குறித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராடி வருவதால் தன்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று சூர்யா கூறியிருந்தார்.

சூர்யாவின் 51வது பிறந்தநாள்!! அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Suriya Net Worth 2026 Actor Owns Rs 350 Crore

சொத்து மதிப்பு 

இந்நிலையில் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ. 45 கோடியில் இருந்து ரூ. 50 கோடி வரை பெற்று வருகிறார்.

கருப்பு படத்திற்கு இவ்வளவு தொகை தான் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிற்அது. சூர்யாவுக்கு மட்டும் மொத்தம், ரூ. 350 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்குமாம்.

அதேபோல் அவரின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் சொத்து கிட்டத்தட்ட ரூ. 500 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சூர்யா - ஜோதிகாவுக்கு சென்னை, மும்பையில் விலையுயர்ந்த சொகுசு வீடுகளும் பல சொகுசு கார்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.