பத்திரிக்கையாளரை கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்! காசு போட்டு டிக்கெட் வாங்கி கொடுத்த சூர்யா..

Suriya EtharkkumThunindhavan sunpictues
By Edward Mar 10, 2022 08:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சூரரை போற்று, ஜெய் பீம் படத்தின் வெற்றியை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார் நடிகர் சூர்யா.

இன்று மார்ச் 10ல் தியேட்டரில் வெளியாகிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கலவையான விமர்சன்ங்களை பெற்று வரும் எதற்கும் துணிந்தவன் படத்தை சில தியேட்டரில் நிறுத்தியுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, படம் வெளியாகும் முன் பத்திரிக்கையாளர்களுக்கும் விமர்சனம் செய்பவர்களுக்கும் சிறப்பு காட்சிகள் அமைத்து தருவது வழக்கம். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை செய்யவில்லை.

தயாரிப்பு நிறுவனம் கண்டுக்கொள்ளாத நிலையில் நடிகர் சூர்யா பத்திரிக்கையாளர்களுக்கு தன் காசினை போட்டு டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளாராம்.