ஓ இது அதுல.. பிறந்தநாள் முன்னிட்டு சூர்யா செய்த விஷயம், ட்ரெண்டிங் வீடியோ
Suriya
Tamil Cinema
Trending Videos
Tamil Actors
By Bhavya
சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த வருடம் கங்குவா படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை.
இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று குடும்பத்துடன் கேக் வெட்டி தனது 50வது பிறந்தநாளை சூர்யா கொண்டாடியுள்ளார்.
ட்ரெண்டிங் வீடியோ
இந்நிலையில், சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நேற்று அவரது வீட்டிற்கு முன்பு வந்து நிற்க விஜய் போன்று சூர்யாவும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Crazy crowd at his house 🔥#Karuppu #HappyBirthdaySuriya pic.twitter.com/3Na7FyH894
— Naveen (@NaveenSuriya_FC) July 23, 2025