சூர்யாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மா!! இப்போ Corporate Lawyer... ரீசெண்ட் புகைப்படங்கள்..
Suriya
Shriya Sharma
Tamil Actress
Actress
By Jai
ஸ்ரேயா சர்மா
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

வழக்கறிஞர்
அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது வழக்கறிஞர் படிப்பை முடித்து Corporate Lawyer-ஆக வேலையும் செய்து வருகிறார்.