விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா வாங்கியுள்ள சம்பளம்..

Suriya Vishwanath & Sons
By Karthick Raja Aug 05, 2026 03:00 PM GMT
Report

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார், பாலிவுட் நடிகை ரவினா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. | Suriya Salary For Vishwanath And Sons Movie

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவரும் திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ் என்பதால், எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இப்படமும் பிளாக்பாஸ்டராக அமைகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. | Suriya Salary For Vishwanath And Sons Movie

ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இணையத்தில் கூறப்படும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.