என்னது கமல் அண்ணாவா? விக்ரம் படத்துக்காக ஒத்த ரூபாய் கூட வாங்காத சூர்யா! இதுதான் காரணம்
Kamal Haasan
Suriya
Lokesh Kanagaraj
Vikram Movie
By Edward
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி மக்கள் மனதை ஈர்த்து வரும் படம் விக்ரம். ஜூன் 3 ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பை தாண்டி நடிகர் சூர்யாவின் சில நிமிட சிறப்பு தோற்றம் படத்திம் மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அதுவும் 30 வருடன் சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இதற்காக சூர்யாவுக்கு 2 அல்ல து 3 கோடி ரூபாய் கொடுக்க நிர்ணயித்திருந்தார்களாம்.
ஆனால் சூர்யாவின் பல ஆண்டுகள் கனவு, கமல் ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது தானாம். அதற்காக படத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று நடித்து கொடுத்துள்ளாராம் சூர்யா.