சூர்யா தம்பி படத்திற்கு அலங்கோலமாக வந்த தெலுங்கு நடிகை! கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் அக்கட தேசத்து வரவு அதிகரித்ததை அடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கியத்துவம் காட்டப்பட்டு வருகிறது. சமீபத்திய காலங்களில் நடிகர் ஜெயம் ரவியின் படத்தில் நித்தி அகர்வால் முன்னணி நடிகையாக அறிமுகமானதை தொடர்ந்து நடிகர் சிம்பு படத்திலும் நடித்து பிரபலமானார். இதைதொடர்ந்து, தளபதி விஜய்யின் 65வது படத்தில் நடிகை பூஜா ஹெக்டே வருடங்களுக்கு பிறகு அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி படத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவும் களமிரங்கவுள்ளார். சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.
நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியாக உள்ள திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் தான். அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. தளபதி 65 படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பட வாய்ப்பு ஒன்றை தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த ரஷ்மிகா மந்தனாவை பார்த்து ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. ஒல்லியாக இருந்த ரஷ்மிகா மந்தனா கொஞ்சம் உடல் எடை கூடி படுமோசமான ஆடையில் வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.