இந்த இயக்குநரின் கதை அப்படி போகுதா? அம்மாவுக்கு ரூட்டை போட்ட சூர்யா!

Surya Bala Hemamalini
8 மாதங்கள் முன்
Jeeva

Jeeva

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் பெரியளவில் பேசப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சூர்யா பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாலா இயக்கத்தில் கடைசியாக சூர்யா பிதாமகன் படத்தில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா - பாலா புதிதாக இணையவுள்ள படத்தில் சூர்யா மற்றும் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு கதாபாத்திரங்களிலிலும் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா வயதான தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹேமமாலினியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சூர்யா ஹேமாலினியின் மகளான ஈஷா தியோல் உடன் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த இயக்குநரின் கதை அப்படி போகுதா? அம்மாவுக்கு ரூட்டை போட்ட சூர்யா! | Surya Hema Malini Bala Film


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.