மேசேஜ் அனுப்பினேனா..ஒழுங்கா ரூ.100 கோடி வைங்க!! நடிகைக்கு சிக்கலாக மாறிய சூர்யகுமார்..
சூர்யகுமார்
2026 ஆரம்பமாகும் நேரத்தில் டி20 உலககோப்பை தொடரின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இப்படியொரு சிக்கலா என்று கூறும் அளவிற்கு நடிகை ஒருவர் சொன்ன குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தனக்கு பல கிரிக்கெட்டர்கள் மெசேஜ் அனுப்புவார்கள், அதில் சூர்யகுமார் யாதவ் நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று நடிகை குஷி முகர்ஜி கூறியிருக்கிறார்.
குஷி முகர்ஜி
இதுகுறித்த செய்திகள் பரவி சர்ச்சையாகிய நிலையில், சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான காதல் உறவும் இல்லை, நாங்கள் நண்பர்களாக பேசிக்கொள்ளக் கூடாதா? தானே முன்வந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் குஷி முகர்ஜி.
இந்நிலையில் சூர்யா குமார் யாதவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதற்காக மும்பையைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான ஃபைசான் அன்சாரி என்பவர் போர்க்கொடி தூக்கி காசிபூர் காவல் நிலையத்தில் குஷி முகர்ஜி மீது புகாரளித்தும் 100 கோடி ரூபா மானநஷ்ட ஈடு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

குஷி முகர்ஜி பொய் சொல்லி விளம்பரம் தேடுகிறார். சூர்யகுமார் யாதவ் நாட்டின் பெருமை. அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதை அனுமதிக்க முடியாது. குஷி முகர்ஜி மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் செய்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகை பூனம் பாண்டே மீது இதேபோல் ரூ.100 கோடி ரூபாய் வழக்கு தொடர்ந்திருந்த இந்த ஃபைசான் அன்சாரி என்ற சமூக ஆர்வலர்.