அந்த அறையை பகிரும்படி கூப்பிட்ட தயாரிப்பாளர்! கையை குலுக்கியபடி நடிகரிடம் தப்பித்த சுஷாந்தின் முன்னாள் காதலி!

song dance sushant ankita
By Jon Mar 26, 2021 06:44 PM GMT
Report

சினிமாவில் நடிகைகளுக்கு எதிராகவும் காஸ்டிங் கவுச் ஆரம்பத்தில் இருந்தே நடக்கிறது. நடிப்பதில் ஆர்வம் கொண்டு இருக்கும் நடிகைகளுக்கு படவாய்ப்பு தருவதாக கூறி அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைப்பதை பிரபலங்கள் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அதை தற்போது மீடு மூலம் பலர் உண்மையை உடைத்து வருகிறார்கள்.

அந்தவகையில் பாலிவுட் நடிகர் மறைந்த சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி அங்கிதா லோகந்தேவும் அப்படியான சம்பவத்தை அனுபவித்ததாக கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அங்கீதாவை ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்பு கொடுப்பதாக ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

அங்கு வந்த தயாரிப்பாளர் சிலபல அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கைகுலுக்கி உள்ளார். நடிகை சங்கீதா அட்ஜஸ்ட்மென்ட் என்றால் நடிகருடன் டின்னர், பார்ட்டிக்கு செல்ல வேண்டுமா என்று கேட்டாராம். அதற்கு தயாரிப்பாளர் கையை குலுக்கினால் படுக்கைக்கு வா என்று அர்த்தம் எனவும், அந்த நடிகருடன் சென்றுவிட்டு அடுத்த நாள் என்னிடம் வந்துவிடு எனவும் கூச்சமே இல்லாமல் கூப்பிட்டாராம்.

உடனே டென்ஷனான அந்த நடிகையை சமாளிப்பதற்காக பணம் கூட சேர்த்து கொடுக்கிறோம் என்று கூறியுள்ளார் அந்த தயாரிப்பாளர். பணத்தைக் காட்டி என்னை விலைக்கு வாங்க முடியாது என்று கூறிவிட்டு அந்த படத்திலிருந்து விலகி அநத பக்கமே பார்க்காமல் சென்றுவிட்டாராம். யார் அந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று பாலிவுட் வட்டாரத்தில் குழம்பி வருகிறார்கள்.