46 வயதான நடிகை சுஷ்மிதா சென்னா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் மகள்..
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சுஷ்மிதா சென். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமான சுஷ்மிதா 1994 மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று உலக அழகியாகினார். இதையடுத்து முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடினார்.
40 வயதை தாண்டிய நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார். அதற்கிடையில் ரெனி சென் என்ற 21 வயது மூத்த மகளும், அலிஷா சென் என்ற இளைய மகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சில ஆண்டுகளாக இரு மகள்களின் அனுமதியோடு தன்னைவிட 15 வயது குறைந்த நடிகர் ரோமன் ஷாவ்லுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த உறவு கடைசி வரை நீடிக்காமல் இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது சுஷ்மிதா சென் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த மூத்த மகள் ரெனி சென் how cute are you maa என்று கூறியுள்ளார்.
உடற்பயிற்சி யோகா போன்றவற்றை இந்த வயதில் தொடர்ந்து வரும் சுஷ்மிதா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியாக இளமையுடன் காணப்பட்டு வருகிறாரே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.