சினிமாவை விட்டு விலகிய நடிகை சுவலட்சுமி தெரியுமா? தற்போதைய நிலை
சுவலட்சுமி
1994ல் வங்க மொழி படமான உத்தோரன் படத்தில் நடித்து அறிமுகமாகி, 1995ல் அஜித் நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழில் நடித்து அறிமுகமாகியவர் தான் சுவலட்சுமி. முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

கோகுலத்தில் சீதை, லட் டுடே, நிலவே வா, இனியவளே, தினம் தோறும், ஏழையின் சிரிப்பில், மாயி போன்ற படங்களில் நடித்தார். அடக்கவுடக்கமான ரோலில் மட்டுமே நடித்த சுவலட்சுமி, 2001 - 2002ல் வெளிப்பரப்பான பார்வதி சீரியலில் நடித்தார். அதன்பின் படிப்படியாக சினிமாவில் இருந்து விலகினார்.
பின் ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார். ஜெனிவா, சான் பிரான்சிஸ்கோ போன்ற படங்களில் வாழ்ந்து வந்த சுவலட்சுமி, சான் பிரான்சிஸ்கோவிலுள்ள அகாடமி ஆப் ஆர்ட்ஸ் யூனிவர்சிட்டியில் மாஸ்டர் ஆஃப் ஃபைவ் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றார்.
தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், கலை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
