பொண்ணு கேட்ட நடிகர்..6 மாசமா லவ் டார்ச்சர் செய்த நபர்!! நடிகை அஸ்வினி ஓப்பன் டாக்..
அஸ்வினி நம்பியார்
90-ஸ் காலக்கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அஸ்வினி நம்பியார் (Rudra). பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை அஸ்வினி, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் சுழல் 2 வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு ரசிகர்கள் பலர் லவ் லட்டர் அனுப்புவார்கள். சிலர் பேப்பரில் கிஸ் செய்து அனுப்புவார்கள். ஒருத்தர், 6 மாசம் சீரியஸாக காதலித்து லவ் லட்டர் அனுப்புவார். ஒரு கட்டத்தில், நான் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை என்பதால், ரொம்ப மோசமாக மாறி இறந்துவிடுவேன் என்று கூறி லட்டர் அனுப்புவார்.
பொண்ணு கேட்ட நடிகர்
அது என்னை ரொம்பவும் பாதித்தது. எனக்கு அதனால் பயம் வந்ததால், அம்மா அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதேபோல் கூட நடித்த நடிகர்களும் காதலித்தார்கள். கல்யாணம் வரை வந்திருக்கிறார்கள். சில நடிகர்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பொண்ணு வரைக்கும் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அம்மா, அவள் கேரியரில் கவனம் செலுத்தணும், இப்போதைக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அந்த நடிகர்கள் இப்போது கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று நடிகை அஸ்வினி நம்பியார் தெரிவித்துள்ளார்.