இசையமைப்பாளர் பாலியல் புகார் விவகாரம்!! ஸ்வாகதாவுக்கு குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்..
பாடகி ஸ்வாகதா
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் பின்னணி பாடகியாக பாடி பிரபலமானவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பெரிய இசையமைப்பாளர், ஆனால் ஒழுங்காக பியானோ கூட கையாளத் தெரியாது. விருது கொடுப்பவர்கள் எப்படி இப்படிப்பட்ட நபர்களுக்கு எல்லாம் விருது கொடுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

என்னிடம் அந்த இசையமைப்பாளர் அத்துமீறி நடந்து கொண்டப்பின், நான் அந்த கொடூரன் என்னைத் தொட்ட இடத்தில் இருக்கும் தோல் உரிந்து, புதுத்தோல் வரும்படியான சிகிச்சையை மேற்கொண்டேன். என்னுடைய மொபைலில் கூட அந்த இசையமைப்பாளரின் பெயர் வரக்கூடாது என்பது போல் செட்டிங்ஸ் அமைத்து வைத்துள்ளேன். இன்று நான் அந்த பயம், மன உளைச்சல் என்று எல்லாவற்றில் இருந்தும் வெளியே வந்துவிட்டேன். ஆனால் இப்போது நான் தைரியமாண பெண்ணாக இருக்கிறேன்.
அந்த இசையமைப்பாளரின் பெயரை நான் சொல்லாமல் விஷயத்தை சொல்லியுள்ளதால், அந்த இசையமைப்பாளர் என்னை ஏதாவது செய்ய முயற்சிக்கலாம், பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம் தற்போது இருக்கிறது. என்னிடத்தில் மட்டுமில்லாமல் வேறு சில பெண்களுடனும் அந்த கொடூரன் இப்படித்தான் நடந்து கொண்டுள்ளார்.

நான் சில பெண்களுக்கு அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர உதவியிருக்கிறேன். இது அந்த இசையமைப்பாளரின் மனைவிக்கும் தெரியும். தெரிந்து கொண்டே பின்பும் அந்த இசையமைப்பாளருடன் தான் அவர் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஃபைல்ஸ், அதைவிட மோசமானவன் அந்த இசையமைப்பாளர், விரைவில் அவர் பெயரை கூறுவேன் என்று கூறியிருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன்
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஸ்வாகதாவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், இதைப் பெரிய அளவில் பரப்புங்கள்! இன்னொரு இசையமைப்பாளரின் பேரைக்கெடுக்கவோ, தொழில் பொறாமையாலோ அல்ல. இதில் ஸ்வாகதாவின் ஒரு கூற்றை கவனியுங்கள். "அந்த இசையமைப்பாளரின் காமவேட்டை இன்றும் தொடர்கிறது. பல இளம் பெண்களுக்கு இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

" அந்தப் பலிகள் தொடர்வதை உடனே நிறுத்தவும், பெண்கள் காப்பாற்றப்படவும் அவர் யார் என்பது உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். ஸ்வாகதாவை பேரைச் சொல்ல நாம் வற்புறுத்த முடியாது. ஆனால் தேவையான எல்லாக் குறிப்புகளையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
இந்த நேர்காணலின் கீழே உள்ள கருத்துகளில் பலரும் அவர் பெயரை ஊகித்துவிட்டனர். காவல்துறை ஒருசில நிமிடங்களில் இவரைக் கண்டுபிடித்து கைதுசெய்ய முடியும் என்று தன்னுடைய ஆதவரை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.