ஸ்வீட்ஹார்ட் பட தோல்வி!! தயாரித்து தலையில் துண்டைப் போட்ட யுவன் சங்கர் ராஜா..
Yuvan Shankar Raja
Gossip Today
Rio Raj
By Edward
ஸ்வீட்ஹார்ட்
இயக்குநர் ஸ்வினீத் சுகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியான படம் ’ஸ்வீட்ஹார்ட்’.
நடிகர் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் உள்ளிட்ட பல நடிப்பில் வெளியான இப்படத்தை தமிழகம் முழுவதும் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டிருந்தார். இப்படத்திற்காக தமிழக வெளியீட்டு உரிமையை சுமார் 5 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.
இதுவரை இப்படம் தமிழகத்தில் மொத்தமே ஒரு கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என்று விநியோகஸ்தர்களின் கருத்தாக இருக்கிறது.
இதனால் இத்திரைப்படத்தால் சுமார் 4 கோடி ரூபாய் வரை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இந்த வசூலால் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
