ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் ஒத்தவார்த்தையில் பதிலடி!! முற்றுப்புள்ளி வைக்கவுள்ள தளபதி விஜய்

Rajinikanth Vijay Gossip Today Jailer Leo
By Edward Aug 04, 2023 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட நடிகராகவும் உருவெடுத்துள்ளவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தின் வேலைகளில் இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் முக்கிய பாடல்களும் வெளியானது.

லியோ படத்தினை தாண்டி தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருவது ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் அடுத்து விஜய்க்கு தான். ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக படுமோசமான இணைய சண்டை நடைபெற்று வருகிறது.

இது குறித்தும் ரஜினி ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்சில் பேசியது குறித்தும் இணையத்தில் வாக்குவாதங்களாக சென்று கொண்டிருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த விசயம் குறித்து பகிர்ந்தும் வருகிறார்கள்.

இப்படி சூப்பர் ஸ்டார் விஜய் தான் என கொளுத்தி போட்ட அந்த பெரிய தீயை அணைக்க, இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் விஜய் அதை மறுத்து பேசினால் தான் அது முடியும் என்று பலர் கூறி வருகிறார்கள். அப்படி அதை அணைக்க விஜய்யே ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லவுள்ளாராம்.

லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேசவும் இருக்கிறாராம். அவரை பார்த்து வளர்ந்தவன் நான் என்றும் ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவிருக்கிறார்.

இப்படி விஜய் செய்தால் விஜய்யை தூக்கிக்கொண்டாருபவர்கள் ரசிகர்களை தாண்டி அதிகமானோர் பாராட்டுவார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய பல விசயங்களையும் ரசிகர்களுக்காக பேசுவார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.