காசுக்காக இதையும் செய்வேன்? சினிமாவை விட்டு விலக முடிவேடுக்கும் தனுஷ் பட நடிகை!
நடிகர் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்த படம் ஆடுகளம். கதை, திரைக்கதை, ஸ்கிரீன் பிளே உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் சிறக்க செய்திருப்பார் இயக்குனர் வெற்றிமாறன்.
இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை டாப்ஸி பண்ணு. ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூதம் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கு என நடித்திருந்த டாப்ஸி இந்தி பக்கம் சென்று தென்னிந்திய மொழி மற்றும் படங்களை பற்றி பெருமைப்படுத்தியும் பேசி வந்தார். சமீபத்தில் லூப் லபேடா படத்தின் நடித்தும் சில படங்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
இந்நிலையில் சினிமாவை விட்டு விலகுவதை பற்றி சமீப்பத்திய பேடியொன்றில் கூறியுள்ளார். வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை.
அதற்கான தேவையான பணத்தினை சம்பாதித்து விட்டு அதன்பின் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணம் எப்போது தோன்றுகிறது அப்போது தான் சினிமாவை விட்டு விலகுவேன். ஆடம்பர வாழ்க்கை எனக்கு சுத்தமாக பிடிக்காதது.
ஒரு பொருளை பலமுறை மாற்ற எனக்கு பிடிக்காது. அது கார் மொபைல் போன் கூட என்னால் மாற்ற முடியாது. நான் வாங்கிய சம்பளத்தில் வாங்கப்பட்ட கார் இன்னும் நான் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.