புகழுக்காக, பணத்துக்காக நான் நடிக்கமாட்டேன்!! நடிகை டாப்ஸி வெளிப்படை பேச்சு..

Taapsee Pannu Gossip Today Tamil Actress Actress Toxic
By Jai Sep 03, 2026 01:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை டாப்ஸி. முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி, தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருவார்.

டாப்ஸி

சமீபத்தில், சில மாதங்களில் வெளியான சில படங்களை என் குடும்பத்தினருடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா? என்று யோசித்தேன். இப்போது எடுக்கப்படும் இந்த வகையான படங்களில் நடிக்க எனக்கு துளியும் விருப்பமில்லை.

புகழுக்காக, பணத்துக்காக நான் நடிக்கமாட்டேன்!! நடிகை டாப்ஸி வெளிப்படை பேச்சு.. | Taapsee Pannu Prefer Retiring Remark Sparks Toxic

என்னுடைய சினிமா பயணம், காலத்தை கடந்து நிற்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். 10 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது என் தேர்வுகள் எனக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது. இப்போது உருவாக்கப்படும் இந்த வகையிலான படங்கள் மட்டுமே எடுக்கப்படும் சூழல் நிலவியிருந்தால், என்னை போன்ற ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்காது.

ஒரு நடிகையாக தற்போது உருவாகப்படும் இது போன்ற படங்களில் ஒருபகுதியாக இருக்க தான் விரும்பவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் கமர்ஷியல் வெற்றியை மட்டுமே முதன்மையாக கொண்டு படங்கள் உருவாக்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது என்னை போன்ற நடிகைகளால் நிலைக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

புகழுக்காக, பணத்துக்காக நான் நடிக்கமாட்டேன்!! நடிகை டாப்ஸி வெளிப்படை பேச்சு.. | Taapsee Pannu Prefer Retiring Remark Sparks Toxic

வெறும் புகழுக்காக, பணத்துக்காக, என் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் பதிப்புக்கும் பொருந்தாத படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் சுயமரியாதையை பாதிக்காத வகையில் படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.

ஏனென்றால் வருடங்காலத்திலும் பொதுமக்கள் என் படங்களை பார்க்கும்போது, தவறான தேர்வுகள் செய்ததாக உணரும் சூழல் வரக்கூடாது, அதனால் கவனமாக இருக்கிறேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். அவர் கூறியது டாக்சிக் படத்தையா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.