52 வயதில் அஜித் பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா
Ajith Kumar
Tabu
By Kathick
அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடித்திருந்தார்.
பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் தபு தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 52 வயதாகும் நடிகை தபுவிற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் தபு, ஹாலிவுட் சினிமாவிற்கு சென்றுள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வரும் Dune: Prophecy எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளாராம் நடிகை தபு. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.