20 வருடத்திற்கு பிறகு விஜய்யை தூக்கிபோட்டு அஜித் பக்கம் தாவிய இயக்குநர்! கும்பிட்டு பாத்தாலும் நடக்குமா!

thala thalapathi Murugadoss thuppakki dheena
By Jon Mar 31, 2021 06:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பாலிவுட் அளவிற்கு பிரபலமானவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். நடிகர் அஜித்தின் தீனா படத்தில் இயக்குநர் அவதாரத்தை தொடர்ந்தார் முருகதாஸ். இதையடுத்து, நடிகர் விஜயகாந்த், சூர்யாவுடன் இயக்கி பெரிய ஹிட் கொடுத்தார். 2011ல் நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கிடைத்து 2012ல் துப்பாக்கி படத்தினை வெளியிட்டு பிரம்மாண்ட வசூலை பெற்றார்.

அடுத்தடுத்த வருடங்களில் நடிகர் விஜய்யுடன் 3 படங்களை இயக்கினார். நான்காவது முறையுன் நடிகர் விஜய் படத்தை வைத்து கூட்டணி பேச சென்ற போது ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஏற்கனவே வெளியான படங்களை டிங்கரிங் செய்து கதையை கூறியதால் தான் இப்படி. முருகதாஸை வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறொரு இயக்குநரை அடுத்த படத்தில் சேர்த்துள்ளார் நடிகர் விஜய்.

சரி விஜய் போனா என்ன என்று சூர்யா பக்கம் சென்றால் பல படங்களில் கமிட்டாகி கால்ஷீட் கொடுக்காமல் இருந்து வருகிறாராம். தற்போது இருக்கும் நிலையில் முருகதாஸ் முன்னணி நடிகர்களை தவிர இரண்டாவது கட்ட நடிகர்களுடன் படம் பண்ண முடியாது என்று நினைத்து தல அஜித் பக்கம் சென்றுள்ளார் காப்பி இயக்குநர். தற்போதைக்கு அடுத்து ஃப்ரீயாக இருக்கும் நடிகர் என்று பார்த்தால் அது தல அஜித் தான்.

ஆனால் அஜித்துக்கும் முருகதாசுக்கும் ஏற்கனவே 20 வருட பஞ்சாயத்து உள்ளது. தற்போது சண்டையை மறந்து அஜீத்துடன் படம் செய்ய ரெடி என முருகதாஸ் கோலிவுட் வட்டாரத்தில் தூது விட்டுள்ளாராம். ஏற்கனவே வலிமை படத்தில் பிஸியாக இருக்கும் தல அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியும் இவர் படத்தை எடுக்க கிட்டதட்ட 3 வருடங்களாவது ஆகும் என்கிறார்கள்.