தொழிலதிபருடன் தமன்னாவுக்கு திருமணம்.. 32 வயதில் நடிகை எடுத்த முடிவு
தமன்னாவுக்கு திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னாவிற்கு திருமணம் என்று கூறி அடிக்கடி வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவும். அதெல்லாம் பொய் என்று கூறி தமன்னாவும் விளக்கம் அளிப்பார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது வதந்தி அல்ல உண்மை என்று தெரிவிக்கின்றனர். ஆம், நடிகை தமன்னா தனது வீட்டில் பார்க்கும் மாப்பிளையை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று முன்பிருந்தே கூறி கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில், தமன்னாவிற்கு ஏற்றபடியான முன்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை தம்மாவுடைய பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.
அவருடன் தான் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் வதந்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கும் தமன்னா தற்போது எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், இந்த திருமண செய்தி உண்மை தான் என்று கூறப்படுகிறது. விரைவில் தம்மனாவே தன்னுடைய திருமணத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
