நடிக்க வந்த போது தென்னிந்திய சினிமாவில் ஒருவர் என்னை தொந்தரவு செய்தார்- தமன்னா பகீர் தகவல்
Tamannaah
By Tony
தமன்னா இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர். இவர் தற்போது பல பேட்டிகளில் வெளிப்படையாக பல தகவல்களை கூறி வருகிறார்.
அந்த வகையில் ஒரு பேட்டியில், நான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய சினிமாவில் ஒருவர் என்னை தொந்தரவு செய்தார். என்னிடம் கொஞ்சம் எல்லை மீறவும் செய்தார்.
இப்படியெல்லாம் செய்தால் நான் நடிக்க மாட்டேன் என்றேன், உடனே என்னிடம் அவர் மன்னிப்பு கேட்டார், அந்த நிகழ்வு எனக்கு பெரிய மன சங்கடத்தை கொடுத்தது என தமன்னா கூறியுள்ளார்.