நயன்தாரா தவறவிட்ட வாய்ப்பு.. சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தமன்னா

Nayanthara Tamannaah
By Kathick Mar 09, 2025 05:45 PM GMT
Report

தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபகாலமாக இவருடைய நடிப்பை விட நடனத்திற்கு தான் ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

இவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் கல்லூரி, படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு ரசிகர்களிடையே நல்ல பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பையா தான்.

நயன்தாரா தவறவிட்ட வாய்ப்பு.. சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தமன்னா | Tamanna Utilized The Nayanthara Missed Chance

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது தமன்னா இல்லை நடிகை நயன்தாரா தானாம்.

ஆனால், கடைசி நிமிடத்தில் சில விஷயங்கள் இயக்குநருக்கும் நயன்தாராவிற்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் நயன்தாராவிற்கு பதிலாக தமன்னாவை இப்படத்தில் கமிட் செய்துள்ளனர். இதனை இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.