நடிகை தமன்னாவுடன் எப்போ திருமணம்? அதற்கு நடிகர் விஜய் கூறிய பதில்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் தமன்னா. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர்கள் இருவரும் புத்தாண்டை ஒன்றாக கோவாவுக்கு சென்று கொண்டாடினார்கள்.
மேலும் தமன்னாவின் பிறந்தநாளை அவரது வீட்டில் விஜய் வர்மா கொண்டாடினார் என்று சொல்லப்பட்டது. இதை அனைத்தும் ரசிகர்கள் ஒன்றிணைத்து இருவரும் காதலித்து வருவதாக கூறிவருகின்றார்.
சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவிற்கு சென்று இருந்த விஜய் வர்மாவிடம் ஏதாவது சந்தோஷமான சுப செய்தி இருக்கிறதா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு விஜய் வர்மா, நான் முடிந்த வரை நல்ல படத்தை கொடுக்க முயற்சி செய்கிறேன் என்று கூறி அங்கு இருந்து எஸ்கேப் ஆனார்.