ஒருமுறை வராது, பலமுறை வரும் ஒரு உணர்ச்சிதான்!! நடிகை தமன்னா ஓபன் டாக்..

Tamannaah Bollywood Indian Actress Relationship
By Jai May 06, 2026 03:15 PM GMT
Report

தமன்னா

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடித்தபோது நடிகை தமன்னா காதலித்து வந்தார். அதன்பின் பல இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்தவர்கள் திருமணம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அவர்கள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலீட் செய்ய ஆரம்பித்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

ஒருமுறை வராது, பலமுறை வரும் ஒரு உணர்ச்சிதான்!! நடிகை தமன்னா ஓபன் டாக்.. | Tamannaah Bhatia Speaks About Love Relationships

தற்போது விஜய் வர்மா, பாடகி ஆலியா குரோஷியுடன் பழகி வருகிறார். இந்நிலையில் காதல் மற்றும் உறவு குறித்து நடிகை தமன்னா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ஒருமுறை வராது, பலமுறை

அதில், இன்றைய காலத்தில் காதல், உறவு என்றால் என்ன என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. காதலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும்போது, அதே ஒரு வகையில் வியாபாரமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஒருமுறை வராது, பலமுறை வரும் ஒரு உணர்ச்சிதான்!! நடிகை தமன்னா ஓபன் டாக்.. | Tamannaah Bhatia Speaks About Love Relationships

உண்மையான காதல் என்பது ஒருவரை கட்டுப்படுத்துவது அல்ல. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதில் தான் உள்ளது. நம் எண்ணங்களை மற்றொருவரின் மீது திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது.

காதல் என்பது வாழ்க்கையில் ஒரேமுறை மட்டும் வருவதில்லை, அது பலமுறை ஏற்படக்கூடிய ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சி வெளிப்புற காரணங்களால் அல்ல, நம்முள் இருந்து உருவாகும் ஒன்று என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் தமன்னா.