66வயது நடிகருடன் ரொமான்ஸ்! வாய்ப்புக்காக நடிகை தமன்னா எடுத்த முடிவு

Tamilactress Tamannah Kedi
By Edward Oct 23, 2021 04:45 PM GMT
Report

அக்கட தேசத்து நடிகைகள் தற்போது அறிமுகமாவது அதிகரித்துள்ளது. அப்படி கேடி படத்தின் மூலம் தமிழ் திரையில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.

எப்போதும் கமர்சியல் நாயகியாக கலக்கி வந்த தமன்னா தற்போது கதையின் நாயகியாகவும் நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் வெப் சீரிஸ் போன்றவற்றிலும் தமன்னாவின் சாய்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் தமன்னா எதற்காக அறுபத்தி ஆறு வயது நடிகருடன் ஜோடி போடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடந்த சில வருடங்களாக அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அவரது படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன.

இந்நிலையில் அடுத்ததாக மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமன்னா அடுத்து சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். சிரஞ்சீவிக்கு 66 வயது என்பது குறிப்பிடத்தக்கது.