இப்படித்தான் பிறந்தநாள் பார்ட்டி இருக்குமா! வைரலாகும் நடிகை தமன்னா புகைப்படம்..
birthdayparty
Tamannaah
tamilactress
bightparty
By Edward
தமிழ் சினிமாவில் கேடி, வியாபாரி, கல்லூரி உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, வீரம், பாகுபலி போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை தமன்னா.
32 வயதான தமன்னா குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். கையில் பல படங்களை வைத்திருக்கும் தமன்னா மும்பையில் தற்போது வசித்து வருகிறார்.
வெளியில் சாதாரணமாக செல்லும் தமன்னாவின் க்ளாமர் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். அந்தவகையில் சமீபத்தில் 32வது வயதை பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் நடித்த பாலிவுட் படமான அட்ராங்கி ரேவின் பிரஸ் ஷோவிற்கும் அந்த ஆடையில் சென்றுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
