கமலால் தூக்கி வீசப்பட்ட நடிகர்கள்? இந்த லிஸ்ட்டையும் விடலையா...

Madhavan Prabhudeva Kamalhaasan Appas
By Edward Jan 24, 2022 05:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்றழைக்கப்படும் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2, விக்ரம் உள்ளிட்ட பல படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றி வரும் கமல் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தியும் உள்ளார். அதே போல் பலர் அவரை கண்டு ஓடியும் உள்ளனர்.

அவருடன் நடித்த நடிகைகள் கூட அவரா வேண்டவே வேண்டாம் என கூறியும் வந்தனர். இந்நிலையில் அவருடன் இணைந்து நடித்த நடிகர்கள் கூட மார்க்கெட் இழந்துள்ளனர். அதில் முதலில் இருப்பவர் நடிகர் மாதவன்.

அன்பே சிவம் படத்தில் நடித்து ஹிட் கொடுத்த இருவரும் மீண்டும் மன்மதன் அம்பு படத்தில் நடித்து பிளாப் கொடுத்தனர் இதனால் மார்க்கெட் இழந்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் மாதவன். நடிகர் பிரபு தேவா மிஸ்டர் ரோமியோ மின்சார கனவு படத்தின் வெற்றிக்கு பிறகு காதலா காதலா படத்தில் கமலுடன் சேர்ந்து மார்க்கெட்டை கெடுத்துக்கொண்டார்.

அடுத்து அப்பாஸ் இளம் நடிகராக திகழ்ந்து வந்தார். வளர்ந்து வரும் நடிகராக இருந்த அவருடன் சேர்ந்து பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்து மார்க்கெட் இழந்து சினிமா வேண்டாம் என்று வேலை பார்க்க சென்றுவிட்டார். அப்படத்தில் நடிகை சிம்ரன் கமலுடன் காதலில் இருந்ததாக கூறி கிசுகிசுக்களும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.