பிரபல நடிகர்கள் எல்லோர் சம்பளத்துக்கும் வந்த ஆப்பு, சோனமுத்தா போச்சா

Tamil Cinema Tamil Actors
By Tony Jun 23, 2024 04:30 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால், நடிகர்கள் சம்பளம் மட்டும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அதும் லட்சங்கள் இல்லை, 100 கோடி, 200 கோடி என எங்கோ செல்கிறது.

இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் OTT வளர்ச்சி தான், பல கோடிகளுக்கு OTT நிறுவனங்கள் பெரிய நடிகர்கள் படத்தை வாங்க முன் வருகிறன்றனர்.

பிரபல நடிகர்கள் எல்லோர் சம்பளத்துக்கும் வந்த ஆப்பு, சோனமுத்தா போச்சா | Tamil Actors Salary Reduced

அதனால், நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தியே வருகின்றனர். ஆனால், சமீப காலமாக OTT நிறுவனங்கள் எங்களால் இனி பெரிய தொகை எல்லாம் கொடுக்க முடியாது என கை விரித்து விட்டனர்.

இதனால் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என புரியாமல், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உச்ச நட்சத்திரங்களின் சம்பளம் கண்டிப்பாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.