காதலித்த கணவரை தூக்கி எறிந்த நடிகைகள்!! போதைக்கு அடிமையாகி வாழ்க்கை இழந்த நடிகை..

Raadhika Sukanya Divorce Tamil Actress Actress
By Edward Oct 14, 2023 09:30 AM GMT
Report

நடிகைகள் சிலர் நடித்து டாப் இடத்தில் இருக்கும் போது திருமணம் செய்து தன்னுடைய மார்க்கெட்டை இழப்பார்கள். அப்படி நடிகைகள் திருமணம் செய்த சில வருடத்திலேயே கருத்துவேறுபாட்டால் விவாகரத்து பெற்று ரீஎண்ட்ரி கொடுப்பார்கள். அந்த லிஸ்ட்டில் யார் யார் என்று பார்ப்போம்.

மகாலட்சுமிக்கு ரொம்ப திமிரு.. செத்து போலாம்-னு நினைச்சேன்!..ஜெயிலில் இருந்து வெளிவந்த ரவீந்தர் பேட்டி

மகாலட்சுமிக்கு ரொம்ப திமிரு.. செத்து போலாம்-னு நினைச்சேன்!..ஜெயிலில் இருந்து வெளிவந்த ரவீந்தர் பேட்டி

  • பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த ஜோடிகளில் ஒருவர் பார்த்திபன் - சீதா. 20 ஆண்டுகளாக வாழ்ந்து கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
  • நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்த நடிகை நளினி பல ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஆனால் இன்றுவரை பிள்ளைகளுக்காக நட்பாக இருந்து வருகிறார்கள்.
  • இயக்குனர் ஏ எல் விஜய் படத்தில் நடித்ததோடு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். இரு ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, அதிலும் அமலா பாலில் சில கெட்ட பழக்கங்கள் பிடிக்காமல் போய் அவரை விவாகரத்து செய்தார் ஏ எல் விஜய். தற்போது சுதந்திரபறவையாக ஊர்சுற்றியும் கவர்ச்சி காட்டியும் வருகிறார் அமலா பால்.
  • திருமணம் செய்த இரு ஆண்டுகளில் இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்து பிரிந்தார் நடிகை சோனியா அகர்வால். இதற்கு சோனியாவின் மதுப்பழக்கம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

குடிபோதையில் என் அண்ணன்களே அதை பண்ணாங்க!! நடிகை சங்கீதாவை கொடுமைப்படுத்திய குடும்பம்...

குடிபோதையில் என் அண்ணன்களே அதை பண்ணாங்க!! நடிகை சங்கீதாவை கொடுமைப்படுத்திய குடும்பம்...

  • நடிகர் பிரதாப் மோகனை திருமணம் செய்த ராதிகா, சில ஆண்டுகளில் அவரைவிட்டு பிரிந்து வெளிநாட்டு நபரை திருமணம் செய்தார். அவரையும் விட்டு பிரிந்த நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை கடைசியில் கரம்பிடித்து வாழ்ந்து வருகிறார்.
  • நடிகை ஊர்வசி, நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் பல ஆண்டுகள் கழித்து மதுபழக்கத்திற்கு ஊர்வசி அடிமையாகிவிட்டார் என்று கூறி அவரை பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்று மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
  • நடிகை அம்பிகா, பிரேம் குமார் மேனை 1988ல் திருமணம் செய்து 8 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். அதன்பின் ரவிகாந்த் என்ற நடிகரை 2000 ஆம் ஆண்டுதிருமணம் செய்து இரு ஆண்டுகளுக்கு பின் பிரிந்தார்.
  • நடிகை ரேவதி சக நடிகர் சுரேஷை காதலித்து 26 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து அதன்பின் பிரிந்துவிட்டார். 50 வயதுக்கு மேல் சோதனை குழாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டார் நடிகை ரேவதி.

அவரை 2ம் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐஸ்வர்யா!.. ரஜினி மாலத்தீவு சென்ற காரணம் இது தானா?

அவரை 2ம் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐஸ்வர்யா!.. ரஜினி மாலத்தீவு சென்ற காரணம் இது தானா?

  • நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்த பிரகாஷ் ராஜ் இரு குழந்தைகள் பெற்றும் அவரைவிட்டு பிரிந்து வேறோருவரை திருமணம் செய்தார்.
  • ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்த நடிகை சுகன்யா, இரண்டே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின் அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறினார். தற்போது தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை சுகன்யா.
  • 1998ல் ஆதர்ஸ் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 2005ல் விவாகரத்து பெற்று பிரிந்தார் நடிகை பானுப்பிரியா.
  • நடிகை சரிகாவை திருமணம் செய்வதற்கு முன்பே காதலித்து கர்ப்பமாக்கி அதன்பின் 1988ல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல் ஹாசன். அதன்பின் விவாகரத்து செய்து பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்து வந்தார் கமல்.
  • நடிகர் ரகுவரனை காதலித்து திருமணம் செய்த நடிகை ரோகினி ஒரு குழந்தை பெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
  • நடிகர் முகேஷ் என்பவரை நடிகை சரிதா 1988ல் திருமணம் செய்து பல ஆண்டுகள் கழித்து 2011ல் விவாகரத்து பெற்றார்.
  • காதலித்து வந்த நடிகர் பிரபு ரகசியமாக நடிகை குஷ்பூவை திருமணம் செய்தார் என்று கூறப்பட்டது. பின் குடும்பத்தினருக்கு தெரியவர இருவரும் பிரிந்துவிட்டனர்.