நடிகை ஜனனியை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Janani Iyer
Tamil Actress
Actress
By Edward
ஜனனி ஐயர்
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இப்படத்தினை தொடர்ந்து தெகிடி, பலூன், கூர்மான், பகீரா, கருங்காப்பியம், ஹாட் ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2018ல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஜனனி 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த ஆண்டு 2025 மே மாதம் தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் ஜனனி.

இதனையடுத்து படங்களில் பெரிதாக நடிக்காமல் இருந்த ஜனனி, தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். நிச்சயத்திற்கு பின் சோசியல் மீடியா பக்கம் வராமல் இருந்த ஜனனி சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதனை பலரும் ஜனனியா இது, ரொம்பநாள் காணவே இல்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
