இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்த நடிகைகள்! அந்த லிஸ்ட்ல இவங்களும் தான்..
சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் தன்னுடன் நடித்த நடிகர் நடிகை இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்வது வழக்கமாகவுள்ளது. அதில் தமிழ் சினிமாவில் இயக்குநர்களை மடக்கி செட்டிலானவர்கள் வரிசையில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
தற்போது தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சரண்யா பொண்வண்ணன் நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.
90களில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ். நடிகரும் இயக்குநருமான பாக்யராஜை இரண்டாவதாக திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
தன்னுடைய சிறுவயதில் தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் அசத்தி வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரியாக இருந்த ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் வாயிலாக இந்தியாவே அறிந்த ராஜமாதா சிவகாமி தேவியானார். இவருடன் இணைந்த இயக்குனர் கிருஷ்ணா வம்சியுடன் இணைந்த “சந்திரலேகா” படத்தின் நட்பு காதலாக மாறியது. மணம் முடித்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.
90களில் தவிர்க்க முடியா நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தற்போது அரசியல் பொறுப்புகள் என படுபிசியாகிவிட்டார். தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் “செம்பருத்தி” படத்தில் அறிமுகமானவருக்கு அங்கிருந்தே இயக்குனர் செல்வமணியின் துணைதான். இருவரும் மணம் முடித்த நிலையில் ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர்.
இயக்குனர் ஹரி பல்வேறு மாஸ் ஆக்சன் படங்களின் வாயிலாக தமிழ் சினிமாவில் பெரிதும் அறியப்பட்டவர். நடிகர் விஜயக்குமார் மஞ்சுளா தம்பதியின் மகளும் அருண்விஜயின் சகோதரியமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகான வெற்றிகளால் தான் தமிழ் திரையில் மின்னத்துவங்கினார் இயக்குனர் ஹரி. திருமணம் முடித்த இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
90 களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தேவையாணி ராஜ்குமார் திருமணம் தான். பெருமளவு ரசிகர்களால் குடும்ப நடிகையாக அறியப்பட்டவர் தேவையாணி. இயக்குனர் ராஜ்குமாரும் பல்வேறு நல்ல படங்களை கொடுத்திருந்தார். இயக்குனர் ராஜ்குமாருடன் இணைந்த தேவையாணிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
90களில் தமிழ் திரைக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழ் திரை. சுந்தர் சியும் அப்போதிலிருந்தே அறியப்பட்ட ஒரு இயக்குனர். இருவரும் இணைந்தது முறைமாமன் படத்தில் தான் அதற்கு பிறகான காதலில் விழுந்தவர் தான் குஷ்பு. இருவரும் இணைந்த திருமணத்தின் வாயிலாய் இரு மகள்கள் உள்ளனர். புகழின் உச்சத்தில் இருந்த நிலையிலேயே திருமணம் முடித்த இந்த பந்தங்கள் இன்று வரை இணைந்து வாழ்வதால் பேசுபொருளாகியுள்ளன.
நடிகை சுஹாசினி இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். மேலும் நடிகை அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம்செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து ரீதியாக விவாகரத்து பெற்றனர். இயக்குநர் அட்லியை நடிகை பிரியா திருமணம் செய்து கொண்டார். இதில் நடிகையும் லேடிசூப்பர் ஸ்டாருமான நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை நிச்சயம் செய்துள்ளார். கூடிய சீக்கிரம் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.