தொழிலதிபரை மணந்த தமிழ் நடிகைகள்!! லிஸ்ட்டில் இணைந்து ஷாக் கொடுத்த நிவேதா..
சினிமா நடிகைகள் பலர், தொழிலதிபர்களை திடீரென திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார்கள். அப்படி தமிழ் நடிகைகள் யார் யார் தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்..
தொழிலதிபரை மணந்த தமிழ் நடிகைகள்
நடிகை லைலா 2006ல் மெஹ்தீன் என்ற ஈரானிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை மீனா 2009ல் வித்யாசாகர் என்ற பெங்களூரு தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு பெண்ணை பெற்றெடுத்தார்.
நடிகை சிம்ரன் தீபக் பாக்கா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், ஹைதராபாத்தை சேர்ந்த ராகுல் என்ற தொழிலதிபரை மணந்தார்.
நடிகை நமீதா திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை அசின் மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகை நிவேதா பெத்துராஜ் துபாய் தொழிலதிபரான ராஜ் ஹித் இப்ரான் என்பவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.