அந்த விஷயத்தில் கமலை மிஞ்சிய நடிகைகள்! சமந்தாவும் தான்?

samantha radhika amalapaul kamalhaasan tamilcinema alvijay sarika tamilactress revathi
By Edward Dec 22, 2021 09:18 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் நட்சத்திரங்களின் காதல் மற்றும் திருமணங்கள் நிலைக்காது என்று கூறுவதுண்டு. அதேபோல் முன்னணி நடிகர் நடிகைகள் வாழ்க்கையில் திருமணத்தால் அவரின் மார்க்கெட் குறைய வாய்ப்புள்ளது என்றும் திருணத்திற்கு பிறகு கசப்பான வாழ்க்கையால் விவாகரத்து பெற்றும் பிரிவார்கள்.

  • அந்தவகையில் தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் தான் முதல் இடத்தில் இருக்கிறார். கமல்ஹாசன் தன்னுடன் நடித்த 18 வயதான் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றார். பின் 2004ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதேபோல், வாணி கணபதியையும் விவாகரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் சில நடிகைகளுடன் திருமணம் செய்யாமலும் பிரிந்துள்ளார் கமல்ஹாசன்.
  • அவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகர் ரகுவரன். 1996ல் நடிகை ரோகினியை திருமணம் செய்து ஆண் குழந்தை பெற்றார். பின் சில வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இயக்குனர் பார்த்திபன் நடிகை சீதாவை வெறித்தனமாக காதலித்து வந்தாராம். பின் திருமணம் செய்த சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
  • 80களில் முன்னணி நடிகையாக இருந்த நளினியை காதலித்த நடிகர் ராமராஜன் திருமணமாக பல ஆண்டுகள் கூட வாழாமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்துக்கு பின் மகள், மகன் திருமணத்தை சேர்ந்தே நடத்தி வைத்துள்ளனர்.
  • நடிகை ராதிகா இயக்குனர் பிரதாப் போத்தனை 1985ல் திருமனம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்தும் பெற்றார். பின் 1990ல் ரிச்சர்ட் கார்டி என்பவரை திருமணம் செய்து இரு ஆண்டுகளுக்கு பின் பிரிந்தார். அதன்பின் சரத்குமார் வாழ்க்கையில் நுழைந்து 2001ல் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். பிரகாஷ்ராஜ், லலிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து 2009ல் விவாகரத்து செய்து பின் 2010ல் போனி வர்மானவை திருமணம் செய்தார்.
  • நடிகை ரேவதி சுரேஷ் மேனனை திருமணம் செய்து 27 வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பின் பெண் குழந்தையை 53 வயதான நிலையில் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
  • இயக்குனர் செல்வராகவன் அவர் படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து, கீதாஞ்சலியை திருமணம் செய்தார்.
  • நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து கோரி பிரிந்துள்ளார். பின் விஜய் வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
  • சமீபகாலமாக சிறந்த காதல் ஜோடி என்ற பெயர் எடுத்த சமந்தா நாக சைதன்யா 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். யார் கண்வைத்ததோ தெரியவில்லை சமந்தாவின் சர்ச்சை படங்கள் அவர்கள் வாழ்க்கையின் பிளவுகளை ஏற்படுத்தியது. இதனால் கடந்த அக்டோபர் 30ல் இருவரும் விவாகரத்து செய்துவிட்டோம் என்று கூறி அறிவித்து ஷாக் கொடுத்தனர்.