அடிமட்ட விலைக்கு வாய்ப்பு கொடுக்க வந்த இயக்குநர்? மூடிட்டு கிளம்புங்க என்ற 39 வயது நடிகை!

tamil-heroine-cinma-photo-vedio-cinima-serial
By Jon Jan 07, 2021 11:45 AM GMT
Report

பெரும்பாலும் சினிமாவில் முன்னணி நடிகையானது படவாய்ப்புகள் கேட்காமலே வீடு தேடி வந்து கதை செல்வார்கள் இயக்குநர்கள். அந்த அளவிற்கு சென்று ஒரே படத்தில் கெட்டேன் என்பது போல் உடல் எடையை குறைத்து தன் மார்க்கெட்டை முற்றிலும் குறைத்துள்ளார் அந்த 6 அடி நடிகை.

தமிழ், தெலுங்கு என முதல் படத்திலேயே ஒரு பீச் பாடல் காட்சியில் நடித்து பிரபலமானார் அம்மணி. அவ்வளவுதான் மொத்த தமிழ் ரசிகர்களையும் கசக்கி கைக்குள் வைத்துக் கொண்டார். போகபோக நாயகி நடிகை கிளாமருக்கு மட்டும் தான் சரிபட்டு வருவார் என நினைத்த நேரத்தில் திடீரென சோலோ ஹீரோயினாக த்ரில்லர் படத்தில் நடித்து மிரள விட்டார்.

இதையடுத்து இன்றுவரை கமர்ஷியல் படங்களில் மட்டும் அல்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வசூல் சாதனைகள் புரிந்து வருகிறார்.

சமீபகாலமாக நடிகைக்கு பிரம்மாண்ட சரித்திர திரைப்படங்கள் என்றால் இன்னும் கூடுதல் சந்தோசமும் ஈடுபாடும் தான். ஏனென்றால் பட்ஜெட் அதிகமாகினால் பணம் அதிகம் கிடைக்கும் என்பதாலே ஒரு காரணம் போல. அந்த வகையில் சமீபத்தில் ஒரு இளம் பெண் போராளியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ஒருவர் அந்த நடிகையை சந்தித்துள்ளார்.

ஆனால் சம்பள விஷயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அடிமட்ட விலைக்கு நடிகையை நடிக்க கேட்டதால் உங்களது பணப்பெட்டியை மூடிக்கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் என விரட்டி அடித்து விட்டாராம் அந்த நடிகை.

அதன் பின்னர் வந்த வாய்ப்பையும் விட்டு விட்டோமோ எனவும் புலம்பினாராம்.