கமலுக்கு ஒரு நியாயம் சூர்யாவுக்கு ஒரு நியாயமா? ஓடி வந்து ஓரவசஞ்சனை காட்டிய தமிழ் சினிமா..
தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகராக திகழ்ந்து தன் படங்களால் அதையெல்லாம் முறியடித்து உலகநாயகன் என்ற பட்டத்தை பெற்றவர் நடிகர் கமல் ஹாசன். பல வித்யாசமான ரோலில் நடித்திருந்த கமல் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய படம் விஷ்பரூபம்.
மக்கள் மத்தியிலும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ர அப்படம் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்தது. அப்போது கமலுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே பின்னால் இருந்து உதவியது.
அப்படி இருந்த திரையுலகம் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு உதவாமல் ஓரவஞ்சனை பார்த்தது. அதுமட்டுமல்லாமல் ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் தாழ்மையாக காட்டி விட்டதாக சூர்யாவுக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர்.
இதனால் வேறு வழியில்லாமல் படத்தில் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மாற்றப்பட்டது. ஆனால் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் சூர்யா அதை தனியாக தாங்கி போராடி அதில் வெற்றியும் கண்டார்.
அவருக்கு நடந்த இவ்வளவு பிரச்சினையிலும் திரையுலகினர் யாரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. கமலுக்கு ஆதரவாக துணை நின்ற திரையுலகம் சூர்யாவுக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.