கணவரை விவாகரத்து செய்து காதலருடன் ரொமான்ஸ் செய்யும் சீரியல் நடிகை நிவேதிதா வெளியிட்ட வீடியோ..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நிவேதிதா பங்கஜ். மகராசி, வாணி ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இவர் மகராசி சீரியல் நடிகர் SS ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்கள் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், தான் தற்போது நடித்து வரும் திருமகள் சீரியலில் உடன் நடிக்கும் நடிகர் சுரேந்தர் என்பவரை காதலித்து வருகிறார் நடிகை நிவேதிதா. அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து, இவர் தான் என்னுடைய புதிய காதலர் என அறிமுக செய்து வைத்துள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தவறான முறையில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் வேதனையடைந்த நடிகை நிவேதிதா அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இதில் "எனக்கு விவகாரத்தாகி மூன்று வருடம் ஆகிவிட்டது. எனக்கு புது காதல் கிடைத்து இருக்கிறது, எனக்கு ஸ்பெஷல் ஆன ஒருவருடன் இனி வாழ போகிறேன். புரிந்துகொண்டு, மதிப்பளியுங்கள், மோசமான கேள்விகள் கேட்க வேண்டாம்" என கூறியுள்ளார்.