TRP-ஐ ஆளும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள்!! ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?
TRP-ஐ ஆளும் சீரியல்கள்
சினிமாவுக்கு இணையாக தற்போது சின்னத்திரை சீரியல்களும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். டாப் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பி போட்டியில் கடுமையாக போட்டிப்போட்டு வருகிரது. டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் சில சீரியல்களின் நடிகைகள் எபிசோட்டுக்கு பல ஆயிரம் முதல் லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.

நீண்டநாள் ஓடும் ஹிட் தொடர்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளுக்கு தங்களின் அனுபவம், ரசிகர் ஆதரவு, கதையின் முக்கியத்துவம் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும். அந்தவகையில் டிஆர்பியில் டாப் இடத்தினை பிடித்துள்ள சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளின் சம்பளம் என்ன என்பதை பார்ப்போம்.
நடிகைகள் சம்பளம்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் லீட் ரோலில் நடிப்பவர் தான் நடிகை பார்வதி வெங்கிடரமணன். ஜனனி ரோலில் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வரும் பார்வதிக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 13 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி ரோலில் நடித்து வரும் நடிகை நிரோஷா, ஒரு நாளைக்கு சுமார் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை மதுமிதாவிற்கு ஒரு நாளை ரு. 15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை வைஷ்ணவி சதீஷ் நடித்து வருகிறார். ரேவதி என்ற ரோலில் அவருக்கு நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.