2 நாளில் 453 கோடியை அள்ளிய தமிழக டாஸ்மாக்.. மது விற்பனை மீம்ஸ்கள்
மதுவிற்பனை
பண்டிகை நாட்கள் என்றாலே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். அப்படி தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளில் மதுவிற்பனை அன்றாட நாட்களைவிட பல மடங்கில் விற்பனையாகும். இதில் உச்சபட்சம் என்றால் புத்தாண்டு மதுவிற்பனை அதிகமாக இருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆம் தேதிகளில் ரூ. 400 கோடிக்கும் மேல் விற்பனை அதிகரிக்கும்.
அதேபோல் தீபாவளி, பொங்கல் சமயங்களிலும் விற்பனை அதிகம் இருக்கும். தமிழ் நாட்டில் இந்த நாட்களில் டாஸ்மாக்கில் எவ்வளவு விற்பனை செய்தது என்று பாக்ஸ் ஆபிஸ் பாணியில் நிலவரத்தை தெரிவிப்பார்கள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தமிழ் நாட்டில் டாஸ்மாக்கில் எவ்வளவு மது விற்பனையாகியுள்ள என்ற தகவல் வெளியாகியுள்ளது.
454 கோடி
ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகையின் போது சுமார் ரூ. 185 கோடியே 65 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 14 பொங்கல் தினத்தில் ரூ. 268 கோடியே 46 லட்சம் விற்பனையாகியுள்ளது. அப்படி இரு நாட்களில் மட்டுமே மொத்தம் ரூ. 454 கோடியே 11 லட்சம் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
நேற்று 15 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அலிக்கப்பட்டதால், இன்று ஜனவரி 16 ஆம் தேதி மது விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் கடந்த ஆண்டு 2024 பொங்கல் பண்டிகைக்கு ரூ. 450 கோடிக்கும் மேல் மது விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


