பிரபல சீரியல்களை ஓரங்கட்டிய தொலைக்காட்சி தொடர்... இப்படியொரு ட்ராமா இருக்கா?
தொலைக்காட்சி தான் தற்போதைய மக்களின் வாழ்வாக இருக்கிறது. அதிலும் இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கே சீரியல்கள்தான். இதனை அறிந்த பல சேனல்கள் போட்டி போட்டு ரசிகர்களின் சீரியல் பசிக்கு தீனி போடும் வகையில் புதிய புதிய கதைக்களத்துடன் சீரியல்களை களமிறக்குகின்றனர் அதில் வெற்றி பெற்றால் தான் நல்ல வரவேற்பு பெறமுடியும்.
அப்படி ஓர் நிலையில் பல தொலைக்காட்சி சேனல்கள் பல சீரியல்களை இறக்கி வருகிறது. அதில் சில மட்டுமே நல்ல இடத்தை பிடிக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடும் ஜீ தமிழின் சீரியல்தான் கோகுலத்தில் சீதை என்னும் வெற்றி தொடர்.
தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கின் முதலிடத்திற்காக அந்த தொலைக்காட்சி செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சத்யா, போன்ற சீரியல்கள் போட்டியிட்டு வருகின்றது. இந்த நிலையில் திடீரென இவற்றை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு வந்து சாதனை படைத்தது கோகுலத்தில் சீதை நெடுந்தொடர். இது ஒரு காதலை மையமாகக் கொண்ட சீரியலாகும்.
இதில் அறிமுக நாயகியாக கன்னட நடிகை ஆஷா கௌடாவும், அறிமுக நாயகனாக பிரபல டான்ஸ் மாஸ்டர் நந்தாவும், வில்லத்தனத்தை தந்திரமாக வெளிப்படுத்தியதோடு தற்போது டி ஆர் பியில் முதல் இடத்தில் தக்கவைத்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி ஓன்று பிக்பாஸ் 5 துவங்கியதும் இந்த சீரியல் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.