ஒவுங்கா மாறு..இல்லன்னா தூங்கும்போது வெட்டிவேன்!! சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி..
இந்திய சினிமாவின் காமெடி லெஜெண்ட்-ஆக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி. எக்கச்சக்க படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த கவுண்டமணி, தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி ஒருசில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்.

திவ்யா சத்யராஜ்
இந்நிலையில் கவுண்டமணி, சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் குறித்து பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பேட்டியொன்றில் பேசிய திவ்யா, கவுண்டமணி மாமானா எனக்கு ரொம்ப பிடிக்கும், எனக்கு டீன் ஏஜ் வயது இருக்கும்போது ஒரு ஹீரோவின் மீது பெரிய க்ரஷ்ஷில் இருந்தேன்.

அவரைப்பற்றி புகழ்ந்து கொண்டே இருப்பேன், ஆனால் அவருக்கு அந்த ஹீரோவை பிடிக்காது. அந்த ஹீரோவிடம் அப்படி என்ன இருக்கிறது என்று இவ்வளவு ரசிக்கிறாய் என்று கேட்பார்.
அந்த ஹீரோவை ரசிப்பதை நிறுத்திவிடு, இல்லையென்றால் நீ தூங்கும்போது உன் முடியை வெட்டிவிடுவேன் என்று கூறுவார். அவர் மீது நான் ரொம்பவே பொசசிவ் ஆக இருப்பேன் என்று திவ்யா தெரிவித்துள்ளார்.