அந்த பொண்ணு போச்சு கவுத்து மூடவேண்டியதா போச்சே! கண்ணம்மாவால் புலம்பும் இயக்குநர்..

TRP television bharathikannamma roshini vinusharavi
By Edward Nov 19, 2021 04:01 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியலில் தற்போது டாப் ஆர்டரில் அதுவும் விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது பிரபல தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா.

டைவர்ஸ் வரை சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்தில் நடிகை ரோஷினி ஹரிபிரியா படவாய்ப்பு கிடைத்த காரணத்தால் சீரியலில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது என்றும் கூறி சீரியலில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். அவர் விலகியதாக அவருக்கு பதில் டிக்டாக் பிரபலமான வினுஷா ரவி இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியின் டாப் ஆர்டரில் இருக்கும் சீரியலில் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் பாக்யலட்சுமி சீரியல் பாரதி கண்ணம்மாவை தட்டித்தூக்கி முதல் இடத்தினை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்துள்ளது.

இதற்கு அடுத்ததாக தான் பாரதி கண்ணம்மா பிடித்துள்ளது. இதற்கு காரணம் சீரியலில் கண்ணம்மாவின் ரோல் மாறியது தான் என்று பலர் கூறி வருகிறார்கள்.

அந்த பொண்ணு போச்சு கவுத்து மூடவேண்டியதா போச்சே! கண்ணம்மாவால் புலம்பும் இயக்குநர்.. | Television Serial Trp Top Tv