இதுவரை தேரே இஷ்க் மே படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Dhanush
Box office
Tere Ishk Mein
By Kathick
ராஞ்சனா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான படம் தேரே இஷ்க் மே.
இப்படத்தில் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

சில விமர்சனங்கள் எழுந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. தேரே இஷ்க் மே படம் இதுவரை 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.