CJP போராட்டம்..பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ய வைப்பேன்!! ஆர் எஸ் எஸ் ஆதவாளர் சர்ச்சை பேச்சு...

Cockroach Janta Party (CJP)
By Jai Jul 28, 2026 07:30 AM GMT
Report

நீட் முறைகேடுகள் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியது பெரியளவில் பேசப்பட்டது. அதனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தப்பின் 3 கோரிக்கைகளை முன் வைத்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தை முடித்தனர்.

CJP போராட்டம்..பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ய வைப்பேன்!! ஆர் எஸ் எஸ் ஆதவாளர் சர்ச்சை பேச்சு... | Tg Mohandas Sparks Row With Shoot Jantar Mantar Pr

டி.ஜி. மோகன்தாஸ்

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கேரளாவை சேர்ந்த ஆர் எஸ் எஸ் ஆதரவாளரும் பாஜகவின் முன்னாள் கேரள நிர்வாகியுமான டி.ஜி. மோகன்தாஸ் சர்ச்சைக்குரிய கருத்தினை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதில், ஜந்தர் பந்தர் பகுதியில் தான் பொறுப்பில் இருந்திருந்தால் போராட்டத்தை ஒரே நாளில் ஒடுக்கி இருப்பேன். ஜந்தர் மந்தரை சுற்றி சுமார் 4 சதுர கிலோமீட்டருக்கு ஊரடங்கு அமல்படுத்திருப்பேன். பின் 3 முறை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை கொடுப்பேன்.

CJP போராட்டம்..பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ய வைப்பேன்!! ஆர் எஸ் எஸ் ஆதவாளர் சர்ச்சை பேச்சு... | Tg Mohandas Sparks Row With Shoot Jantar Mantar Pr

அதன்பின் கலைந்து செல்லாவிட்டால் துப்பாக்கி சூடு நடத்துவேன். உயிர் பிழக்க மக்கள் ஓடி சிதறிவிடுவார்கள். சில உயிரிழக்கலாம். சிலர் நிரந்தர மாற்று திறனாளிகளாக மாறலாம். ஆனால் அடுத்த 4 மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும், அதன்பின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்புவேன் என்றார்.

கூட்டு பாலியல் வன்கொடுமைகள்

மேலும், அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமைகள் நடக்கும், ஆனால் இதில் புகார் எதுவும் இருக்காது. ஏனெனில் பாலியல் வன்கொடுமையை விரும்பும் பெண்கள் தான் அவர்கள் குறிப்பாக இடதுசாரிகள், மதச்சார்பற்றவர்கள், ஜனநாயக ஆதரவாளர்கள், தொழிலாளர் ஆதரவாளர்கள். இதில் யாராவது உயிரிழந்தால் அவர்களை தியாகியாக மாற்றிவிடுவார்கள் என்று சர்ச்சையாக பேசியிருக்கிறார் டி.ஜி. மோகன்தாஸ்.

CJP போராட்டம்..பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ய வைப்பேன்!! ஆர் எஸ் எஸ் ஆதவாளர் சர்ச்சை பேச்சு... | Tg Mohandas Sparks Row With Shoot Jantar Mantar Pr

இதுகுறித்து பலரும் விமர்சித்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஏ.ஏ. ரஹீம் சட்டபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் மோகன்தாஸின் இந்த கருத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை, அவர் ஆர் எஸ் எஸின் நிர்வாகி இல்லை. அவர் எந்த பொறுப்பிலும் இல்லை இதுபோன்ற கருத்துகள் மிக கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் விளக்கம் கொடுத்துள்ளது.